உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர் கிராமத்தில் புனித ஜெபமாலை அன்னை ஆலயம் உள்ளது.இங்கு வழிபடுவது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 9-ந் தேதி மோதல் ஏற்பட்டது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 வன்னிய கிறிஸ்துவர்கள் பலியானார்கள். 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் 2 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்து 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்து கடலூர் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 29-ந் தேதி எறையூர் கிராமத்தில் வன்னிய கிறிஸ்துவர்களின் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இதில் தலித் கிறிஸ்துவர்களுக்கு தனி பங்கு கொடுத்து பிரச்னைக்கு உடனடியாக ஏப்ரல்-1 ந் தேதிக்குள் தீர்வு காண வேண்டும். இல்லையேல் எறையூரில் வசிக்கும் சுமார் 20 ஆயிரம் வன்னிய கிறிஸ்துவர்களும் பாதுகாப்பு அளிக்கும் மதத்திற்கு மதம் மாறுவது என்பது உள்பட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இப்பிரச்னைக்குறித்து புதுச்சேரி பாதிரியார்கள் எறையூர் கிறிஸ்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
Sunday, March 30, 2008
20 ஆயிரம் கிறிஸ்துவர்கள் மதம்மாற திட்டம்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment