முஸ்லிம் சமுகத்தில் பள்ளிவாசலுக்கும்,பள்ளிவாசல் இமாமுக்கும் தனி அந்தஸ்தும், சிறப்பும்,பொறுப்பும் வாய்ந்த பதவி ஆகும். மார்க்க அறிஞர்களை இறைத்தூதர்களின் வாரிசுகளாக அண்ணல் நபிகளார்(ஸல்) அறிவித்துள்ளார்கள். ஆதலால் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஆற்றிய அதே கடமைகளைத்தான் இமாம்களும் நிறைவேற்ற வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.
இன்றைய பள்ளிவாசல்கள் தொழுகையாளிகள் கூடுகிற இடமாகவும்,ஒரு சடங்கு போல வணக்கத்தை நடத்தி முடிக்கின்ற இடமாகவும் இறுக்கிறது. பள்ளிவாசல் என்பது வழிபாட்டுக்கான இடம் மட்டுமா?
கிடையாது.ஒரு இஸ்லாமியக் குடியிருப்பின் எல்லா சமூக,பொருளாதார,அரசியல்,இறைவணக்க செயல்களின் மையம்தான் பள்ளிவாசல்.
இறை நம்பிக்கையைப் புதுபித்துக் கொள்வதற்கும்,இறைவனுக்கும் அடிபணிந்து கொள்வதற்கும், உறுதிமொழியை நினைவுபடுத்திக் கொள்வதற்கும், முஸ்லிம்களுக்கு அன்றாடம் ஐவேளை பயிற்சி கொடுக்கப்படுகிற பாசறைதான் பள்ளிவாசல்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் காலத்து பள்ளிவாசல்கள் அழைப்பு பணிக்கான மையமாகவும், நீதிமன்றமாகவும், அரசியல் கேந்திரமாகவும் பள்ளிவாசல்கள் திகழ்ந்தன.
அங்குதான் வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்பட்டன.
அங்குதான் ஜிஹாதுக்கான அறிவிப்பும் கொடுக்கப்பட்டது.
அதனைக் கேட்டு போர்வீரர்கள் அணிதிரண்டதும் அங்கு தான்.
போர்க்களங்களுக்குப் படைகள் கிளம்பியதும் அங்கிருந்துதான்.
சமுதாய விவகாரங்கள் தொடர்பான ஆலோசனை நடைப்பெற்றதும் அங்குதான்.
ஆதலால்தான் அவர்களால் எண்ணி முப்பதே ஆண்டுகளுக்குள் ஈரான்,ரோம் போன்ற வல்லரசுகளை விழ்த்தமுடிந்தது. நூறாண்டுகளுக்குள் ஸ்பெயின் குகைகள் வரையிலும்,சினத்து கடற்கரைகள் வரையிலும் பரவமுடிந்தது.
ஆனால் இன்று நாம் பெரும் எண்ணிக்கையில்,கோடிக்கணக்கில் இருக்கின்றோம் என்றாலும் உலகெங்கும் இழிவும்,அழிவும் நம் மீது விசப்படுகிறது. அவை முஸ்லிம்கள் மீது பாய்ந்து குதறிச் சிரழிக்கின்றன.
அன்றைய அரபு பாலைவனத்தில் அலைந்து திரிந்துக் கொண்டிருந்தவர்களிடம் இறைனம்பிக்கையும், உறுதியும் வேரூன்றிய போது அவர்கள் மிகச்சிறந்த தளபதிகள் ஆனார்கள்.வரலாற்றின் சவால்களைப்பகுத்து அறிந்தார்கள்.அவற்றை முறியடிக்கவும் ஆற்றல்களை வளர்த்துக் கொண்டார்கள்.
ஆகவே,இன்றைய இமாம்கள் சமுதாயத்தை வழி நடத்துக்கின்ற திறமையையும், ஆற்றலையும் வளர்த்துக் கொள்ள வோண்டும். தகுதியையும், திறமையையும் வள்ர்த்துக் கொண்டால் சமூகத்தையே புரட்டிப் போட்டு மகத்தான மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.
Thursday, March 20, 2008
சமுதயத்தின் எதிர்காலமும், பள்ளிவாசல் இமாம்களும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment