சென்னையில் சர்ச்சைக்குரிய ஓவியக் கண்காட்சி ரத்து ~ திராவிட முஸ்லிம்

Saturday, March 8, 2008

சென்னையில் சர்ச்சைக்குரிய ஓவியக் கண்காட்சி ரத்து


ென்னை லலித் கலா அகாடமியில் ஓவிய கண்காட்சி நடைபெற்று வந்தது. இதில் பிரான்சை சேர்ந்த ஒருவரது ஓவியங்கள் இடம் பெற்றிருந்தன.

ஒளரங்கசீப் ஆட்சிக்காலம் பற்றி இந்த ஓவியங்கள் தவறாக சித்தரிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உள்பட சில முஸ்லிம் அமைப்புகள் அங்கு விரைந்து வந்தன. இதன் நிர்வாகிககள் ஓவியக் கண்காட்சி அமைப்பாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்ததும் போலீசார் விரைந்து வந்தனர். சர்ச்சைக்குரிய ஓவியங்களை அப்புறப்படுத்தும்படி கூறினர். ஆனால் கண்காட்சி அமைப்பாளர்கள் இதை ஏற்க மறுத்தனர். இதனால், கண்காட்சியை தொடர்ந்து நடத்த போலீசார் தடை விதித்தனர். இதன் காரணமாக சர்ச்சைக்குரிய ஓவியக் கண்காட்சி ரத்து செய்யப்பட்டது.

No comments: