விரயமாகும் வரிப்பணம் !!! <script language='javascript' src='http://ping.thenkoodu.com/ping_comments.php?posturl=http://dravidamuslium.blogspot.com/2008/06/blog-post_08.html&postid=4531371823685166261&blogurl=http://dravidamuslium.blogspot.com/2008/06/blog-post_08.html&cmt=2' type='text/javascript'> </script> ~ திராவிட முஸ்லிம்

Sunday, June 8, 2008

விரயமாகும் வரிப்பணம் !!!


தன் இரத்ததை வியர்வையாக்கி சம்பாதித்த பணத்தை, குருவி சேர்ப்பது போல் சேர்த்து, அதில் ஒரு பகுதியை வரியாக கொடுத்தால், அரசு முறை பயணம் என்ற பெயரில் ஊர் சுத்திப்பாக்கும் அமைச்சர்களின் கணக்கை பார்க்கும் போது நெஞ்சு வெடிக்கிறது.
சென்ற வருடம் (2007)நவ 30ந் தேதியோடு கணக்கிட்டால், ஐ.மு.கூ அரசின் அமைச்சர்கள் சுமார் 1 கோடி கிலோ மீட்டர்கள் பயணம் செய்திருக்கிறார்கள்.இதில் சொந்த பயணங்களும் அடங்கும். இவர்கள் பயணம் செய்த மொத்த தூரத்திற்கு பூமியை 256 முறை சுற்றிவந்துவிடலாம்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப்(ஆர்.டி.ஐ) பயன்படுத்தி இந்தியா டுடே பத்திரிக்கையில் வந்த கட்டுரையின் சாரம்சம் இங்கே கொடிக்கப்பட்டுள்ளது. ஐ.மு.கூ அரசின் ஆட்சிக்காலத்தில் வெளிநாடுகளுக்குச் சென்று வந்த அமைச்சர்களின் முதல் 6 நபர்களின் பட்டியல் கிழே:

கமல்நாத்
வர்த்தகம்,தொழில்துறை அமைச்சர்
பயண தூரம்:10,08,165 கி.மீ
அரசுக்கு செலவு: ரூ 1.81 கோடி

ப.சிதம்பரம்
நிதி அமைச்சர்
பயண தூரம்: 3,60,860 கி.மீ
அரசுக்கு செலவு: ரூ 1.45 கோடி

ஈ.அகமது
வெளியுறவுத்துறை இணையமைச்சர்
பயண தூரம்: 6,13,1277 கி.மீ
அரசுக்கு செலவு: 1.37 கோடி

சந்திர சேகர் சாஹு
கிராமப்புற மேம்பாட்டுத் துறை
பயண தூரம்: 12,712 கி.மீ
அரசுக்கு செலவு: ரூ 1.18 கோடி

சிஸ் ராம் ஒலா
சுரங்கத் துறை அமைச்சர்
பயண தூரம்: 57,486 கி.மீ
அரசுக்கு செலவு: ரூ 1.17 கோடி

வயலார் ரவி
வெளி நாடு வாழ் இந்தியர்கள் துறை
பயண தூரம்: 2,83,036 கி.மீ
அரசுக்கு செலவு: ரூ 1.14 கோடி

அமைச்சர்கள் வெளிநாடுகளிள் அனுபவிக்கும் சலுகைகள்:

ஒரு நாளைக்கு ரூ 80,000 - ரூ 1,00,000 வாடகையுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களின் ஜுனியர் அல்லது எக்சிகியூட்டிவ் சூட்களில் தங்கலாம்.நியூயார்க்,பாரீஸ்,லண்டன் ஆகிய நகரங்களில் சுற்றுலா சீசன் உச்சத்தில் இருக்கும்போது சாதாரண சூட்களில்தான் தங்க வேண்டும்.ஆனால், அமைச்சர்கள் சில சமயங்களில் ரூ 2,40,000 வாடகையுள்ள பிரெசிடென்ஷியல் சூட்களில் தங்குகிறார்கள். மேலும் அவர்களுக்கு போக்குவரத்திற்கு கார்களை அங்கிருக்கும் தூதரகமே வாடகைக்கு எடுத்துக் கொடுத்துவிடும் அல்லது அழைப்புவிடுத்திருக்கும் நாடே இந்த வசதியைச் செய்து கொடுக்கும். மெர்சிடிஸ் எஸ் கிளாஸ் என்றால் ஒரு மணி நேரத்திற்கு ரூ 4,000மும் மெர்சிடிஸ் ஈ கிளாஸ் என்றால் ரூ 1,600மும் ஆகும்.

வெளிநாட்டுப் பிரதி நிதிகளைச் சந்திக்கிறோம் என்ற பெயரில்தான் அமைச்சர்கள் இந்த சொகுசுகளை அனுபவிக்கின்றார்கள். இதில் செலவழிக்க உச்ச வரப்பு ஏதும் இல்லை என்பதாலோ அழைப்புவிடுக்கும் அரசாங்கமே அரசு விடுதிகளை வழங்கும்போதும் நம் அமைச்சர்கள் இம்மாதிரி ஹோட்டல்களில் தங்குகின்றனர்.

அதிகாரபூர்வமாக வெளிநாடு செல்ல பிரதமர் அலுவலகம் பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் நிலையில் அமைச்சர்கள் தங்கள் பணத்தை இந்த அளவுக்கு செலவழிப்பது ஆச்சரியம் அளிப்பதாகவுள்ளது. பிரதமர் அலுவலகம் மட்டும் பல பயணங்களைத் தடுத்திராவிட்டால், இந்தப்பட்டியல் இன்னும் பெரிதாக இருக்கும் எங்கின்றன பிரதமர் அலுவாக வட்டாரங்கள்.

"முன்னகர்ந்து செல்லும் அரசு" என்ற வார்த்தைப் பிரயோகத்தைக் கண்டுபிடித்தவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி. இப்போது அவர் உயிரோடு இருந்து, ஐ.மு.கூ அரசு வெளி நாட்டுப் பயணங்களில் நகர்ந்து சென்றிருக்கும் தூரத்தைப் பார்த்தால், மயங்கியே விழுந்திருப்பார்.

2 comments:

கிரி said...

வயிறு எரியுதுங்க :-(

ahamedsaif said...

Good Information and useful information.. Continue your work,,