என்னைத் தூக்கில் போடு - மோடி ஆணவம் ~ திராவிட முஸ்லிம்

Friday, June 20, 2008

என்னைத் தூக்கில் போடு - மோடி ஆணவம்


இருபத்தோராம் நூற்றாண்டின் மாபெரும் இனப்படுகொலைகளை நிகழ்த்தி சாதனை(?) படைத்த நரேந்தி மோடி தனது மனிதகுல விரோதச் செயலை நிகழ்த்தி சாதனை படைத்தவர். விரல்விட்டு எண்ணக்கூடிய சில சக்தி களைத் தவிர அனைவராலும் வெறுக்கப்பட்ட அந்த மனிதர் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் எதிராக விஷத்தை கக்கியிருக்கிறார்.

தனது மாநிலத்துக்கு மத்திய அரசு கூடுதலாக நிதி ஒதுக்க வில்லை என மத்திய அரசை நோக்கி பாய்ந்து பிராண்டினார். மாநிலத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்றால் மாநில முதலமைச்சர் பொதுவாக என்ன செய்வார்? பகிரங்கமாக வேண்டுகோள் விடுப்பார், தலைநகர் டெல்லிக்குச் செல்வார். பிரதமர், நிதியமைச்சர் மற்றும் திட்டக்கமிஷன் துணைத்தலைவர் முதலானோரை சந்திப்பார். தீட்டப்பட வேண்டிய திட்டங்களையும், அதற்குத் தேவையான நிதி குறித்தும் தங்களது கோரிக்கைகளை வைப்பார். இதுவே மாநில முதலமைச்சர்களின் நாகரீகமான நடைமுறை.

ஆனால் இதற்கெல்லாம் மாறாக நாற்சந்தியில் இருந்துகொணடு நாகரீக மற்ற முறையில் இந்திய இறையாண்மைக்கு விரோதமாகவும், தான் வகிக்கும் பதவிக்கு பொருத்தமில்லாத வகையிலும், தான் ஏற்றுக்கொண்ட ரகசிய காப்பு பிரமாணத்திற்கு விரோதமாகவும் பேசினார், அல்ல பிதற்றினார்.

மத்திய அரசு குஜராத் மாநில அரசுக்கு போதுமான நிதி கொடுக்காமல் புறக்கணிப்பதாகவும், மேலும் நிதி கொடுக்காவிட்டால் குஜராத் மாநிலத்திலிருந்து வரிகொடுக்க மாட்டோம் என்றும், மத்திய அரசின் உதவிகள் எங்களுக்குத் தேவையில்லை என்றும், மத்திய அரசின் உதவிகள் பெறாத மாநிலம் என குஜராத்தை அழைக்கட்டும் என்றும் அவர் அதிமேதாவித்தனமாக பேசியுள்ளார்.

மத்திய அரசுக்கு வரிகொடுக்க மாட்டோம் என்று கூறுவது அப்பட்டமான தேசதுரோகச் செயலாகும். நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக கூச்சலிடும் தீவிரவாதிகளின் கூற்றாகவே இது கருதப்படும். இந்திய அரசுக்கு வரிகொடுக்க மாட்டோம் என்றால் இவர் எந்த நாட்டிற்கு வரி செலுத்துவாராம்? இஸ்ரேலுக்கா? அமெரிக்காவுக்கா? நேபாளத்தில் விரட்டப்பட்ட மன்னருக்கா? அல்லது மடங்களுக்கா? என்ன ஒரு மடத்தனமான பேச்சு?

1960களில் காஷ்மீர் மக்களின் மனநிலையை அறிய அவர்களின் அரசியல் அபிலாஷையை அறிய பகிரங்க வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என கோரிக்கை விடுத்தார் காஷ்மீரிகளின் தலைவர் ஷேக் அப்துல்லாஹ். அப்படி யென்ன அவர் தவறாகப் பேசி விட்டார்? என்றே நடுநிலைவாதிகள் எண்ணினர். ஆனால் காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி, இதற்காக ஓட்டெடுப்புவிடச் சொல்வதா? என்ற ஆத்திரத்தில் இந்திய அரசுக்கும் காஷ்மீர் சிங்கமான ஷேக் அப்துல்லாஹ்வுக்கும் விளைந்த விவகாரத்தில் ஷேக் அப்துல்லாஹ்வை கொடைக்கானலில் சிறைவைக்கும் அளவுக்கு நிலைமை தீவிரமடைந்தது.

மோடி தற்போது கூறியிருக்கும் விஷமக்கருத்து நிச்சயம் தேசத்துக்கு ஊறுவிளைவிக்கும் கருத்தாகவே இருக்கிறது என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. மோடி கூறிய வெறிக்கருத்து குறித்து பாஜகவினர் யாரும் வாய் திறக்கவில்லை. இவர்கள் தான் தேசப்பற்று குறித்து பெரிதாக பீற்றிக் கொள்வார்கள். கீழே தள்ளிய கழுதை குழிபறித்த கதையாக தற்போது மீண்டும் உச்சக்கட்டமாக தனது உளறலை மோடி தொடர்ந்துள்ளார். நான் கூறியது தேசத்துரோக கருத்துதான் என்றால் என் மீது தேசத்துரோக வழக்கு தொடர முடியுமா? என மத்திய அரசை நோக்கி சவால் விடுத்தார். அதோடு ஒருநாளைக் கூட வீணாக்க வேண்டாம், இன்றே என்னை தூக்கில் போடுங்கள் என்று பகிரங்கமாக பொதுக் கூட்டத்தில் கூறியிருக்கிறார். அவர்கள் என்னை எப்படி தூக்கில் போடுவார்கள்? என்று நையாண்டி வேறு. அப்சல்குருவையே தூக்கில் போட முடியாதவர்கள் என்னையா தூக்கில் போடப் போகிறார்கள்? என்று கிண்டலடித்துள்ளார். மோடி எனும் பதறவைக்கும் பாதகனை இனப்படு கொலைகளின் காலத்திலேயே தண்டித் திருக்க வேண்டும். மலம் சுமப்பதை புண்ணியமாகக் கருதவேண்டும் என்று தனது துருப்பிடித்த நாவினால் கூறிய தைத் தொடர்ந்து நிரூபிப்பது போல் தலித் களை நுழையவிடாமல் விரட்டி யடித்த அவலக் கதைகளை சாதனை சரித்திர மாகக் கொண்டிருக்கும் மோடியை தண்டிக்க மத்திய அரசும், நீதித்துறையும் இனியும் தாமதித்தால் இந்திய ஹிட்லரின் ஆணவத்தை அடக்கமுடியாமல் போய்விடும். மத்திய அரசு தனது ஆண்மையை நிரூபிக்குமா?

source : tmmk

No comments: