"வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் ஏரியில் 1600 ஆண்டுகளுக்கு முந்தய பல்லவர் காலத்து பழமை வாய்ந்த கல்லாலான 7 அடி உயரம் கொண்ட லிங்கம் ஒன்று, கடந்த மார்ச் 27 ஆம் தேதி அதிகாலை பயங்கர சத்தத்தோடு வெடித்து சிதறியது". இத்தகைய சிறப்புமிக்க பழமை வாய்ங்க்த லிங்கத்தை இஸ்லாமிய தீவிரவாதிகள் வெடிவைத்து தகர்த்துள்ளனர் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் ஸ்ரீதரன் புகார் அளித்துள்ளார்.
மேலும் சிறப்புமிக்க வேலூர் கோட்டையில் உள்ள மசூதியை மீண்டும் தொழுகை நடத்தப்போவதாக வக்போர்ட் வாரியத்தலைவர் அறிவிப்பை எதிர்த்து ' அந்த மசூதி தொழுகை ஏற்றதல்ல என்று முன்னால் எம்.பி. அப்துல் சமத் அரசுக்கு எழுதி கொடுத்துள்ளார் ' என்றும் ஸ்ரீதரன் சுட்டி காட்டியுள்ளார். மேலும் இதை எதிர்த்து வரும் ஏப்-10 ஆம் தேதி வேலூர் கோட்டை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் வரும் ஏப்-14 ஆம் தேதி நெல்லை சீமையில் இந்து மக்கள் கட்சி சார்பாக "தாய்சமயம் திரும்பும் திருவிழா"நடக்க விருப்பதாக அறிவித்துள்ளனர். எனக்கோர் கேள்வி எழுகிறது ஒருவர் கிருஸ்துவமதத்திலிருந்து இந்துவாக மாறுகிறார் என்றால் அவரை உங்கள் 1008 ஜாதியில் எந்த ஜாதியில் சேர்ப்பீர்கள் பிராமணர்களிளா ? தாழ்த்தப்பட்டவர்களிளா?. மேலும் இந்து தொலைக்காட்சியும் உதயமாகப் போகிறதாம்.
Sunday, April 6, 2008
முஸ்லிம் அமைப்புகள் மீது புகார் கூறும் இந்து மக்கள் கட்சியினர்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment