கடந்த செப் 11,2001-க்கு பிறகு தொடங்கிய ஒசாமா வேட்டை சிந்துபாத் கதைக்கு சற்றும் குறைந்ததல்ல "அதெப்படி எந்நேரமும் ரோந்து செல்லும் எண்ணிலடங்கா ஆளில்லா விமாணங்கள்,அளசி ஆராயும் உளவு செய்ற்கைக் கோள்கள்,அதி நவீினப் பயிற்சி பெற்ற கமாண்டோப் படைகள், மில்லியன் கணக்கிலாண பரிசுத் தொகை ...இத்தனை இருந்தும், மத்திய காலத்து மனப்போக்கு கொண்ட , உடல் நலிந்துள்ளதாகக் கூறப்படும் ஒரு நடுத்தர வயது மனிதரை உலகின் மாபெரும் சூப்பர் வல்லரசால் ஏன் பிடிக்க முடியவில்லை ?" என அமெரிக்கா
நியூஸ்வீக் இதழ் கடந்த ஆண்டு செப்டம்பரில் பொருமிப் போய் எழுதியது.
உண்மைதான், பரந்து விரிந்த ஆப்கானிஸ்தானின் எல்லையோர மலைப்பகுதிகளில் ஒசாமா பதுங்கியிருப்பதாக துவக்கத்தில் கலர் கலராகப் படம் ஓட்டிய அமெரிக்கா அரசும், 'உயிருடனோ, பிணமாகவோ ஒசாமாவைப் பிடித்தே திருவோம்' எனக் கொக்கரித்த ஜார்ஜ் புஷ், அடித்த ஆண்டு முதல் ஒசாமா குறித்து ஒரு வார்த்தை கூடப் பேசுவதில்லை.
2001 செப்டம்பரில், அப்போதைய சி.ஐ.ஏ பயங்க்கரவாத எதிர்ப்புப் பிரிவின் தலைவர் காஃபர் பிளாக், புஷ்ஷிடம் "பின்லேடன் தலையைக் கொய்து வந்து உமது காலடியில் சேர்ப்போம் மன்னா" என வீர சபதம் ஏற்றாராம்.இதுவரை 10 மில்லியன் டாலரை பின்லேடனை பிடிப்பதற்காக பாக்கிஸ்தானிடம் அமெரிக்கா செலவழித்துள்ளது. இன்றுவரை அவர் நிழலை கூட தோடமுடியவில்லை.
அமெரிக்காவின் சி.ஐ.ஏ வின் தெற்காசியாவின் நிபுணராகப் பணியாற்றி ஒய்வுப் பெற்ற புரூஸ் ரெய்டல் கூறுகிறார்,'டிசம்பர் 2001-இல் தோரா போரா மலைச் சண்டையில் ஒசாமா தப்பிச் சென்ற பிறகு, அந்த வேட்டையில் எந்த முன்னேற்றமும் ஏற்ப்படவில்லை.உண்மையில் இப்பொழுது நாம் இலக்கற்று இருளில் சுற்றிக்கொண்டுயிருக்கிறோம்.என்றார். என்ன வேடிக்கை, வேற்று கிரகவாசிகளைக் கூட அமெரிக்க ஹீரோக்கள் அடித்துத் துவம்சம் செய்கிறார்கள். ஆனால் ஒரு வறண்ட மலைப் பகுதியில், சில நூறு வீரர்களோடு ஓளிந்துருப்பதாகச் சொல்லப்படும் பின்லேடனைப் பிடிக்க அமெரிக்கா ராம்போக்களால் முடியவில்லை.
பின்லேடனை ஏன் பிடிக்க முடியவில்லை என்ற கேள்விக்கு அமெரிக்க அதிகாரிகள் கூறும் காரணம்,இராக் யுத்தத்தைத்தான்.இராக் யுத்தம் தொடங்கியபிறகு ஆப்கானிஸ்தானின் இயங்கிக் கொண்டிருந்த பெரும்பான்மைப் படையினர், இராக்கிற்கு அனுப்பப்பட்டு விட்டனர் என்கிறார்.ஆனால் அமெரிக்க இராணுவமோ அதிகாரப்பூர்வமாக
தெளிவான கருத்தை சொல்ல மறுக்கிறது.
இவற்றையெல்லாம் விட சி.ஐ.ஏ அதிகாரிகளை அயர்ச்சிக்குள்ளாக்கும் விஷயம்,பின்லேடன் தலைக்கு 25 மில்லியன் டாலர் விலை நிர்ணயித்தும், ஒரு விசுவாசி(கைகூலி) கூட முன்வரவில்லை என்பது தான். அதற்கும் ஒரு காரணம் உண்டு, பாக்கிஸ்தானின் பழங்குடி இனத்தவரிடம் பாஸ்தூள்வாளி எனப்படும் பாரம்பரிய விதி.அதன்படி விருந்தினராக ஏற்றுக்கொண்டவரை உயிரை போனாலும் பாதுகாப்பது.எனவே, உளவாளிகளை உருவாக்குவதோ, கருங்காலிகளை உருவாக்கி அல்காய்தாவிற்குள் ஊடுருவுவதோ சாத்தியமாகிவிட்டது அமெரிக்காவுக்கு.
மொத்தத்தில், எட்டாண்டுகளுக்கு மேலாக 24 மணி நேரமும் ஆப்கானில் ஊர்திகள் நடமாட்டத்தை செயற்கைக் கோள்களால் கவனித்து வரும், உலகிலேயே அதி நவீனமான அமெரிக்க உளவு வலைப்பின்னலில், பின்லேடமிம் ஒரு செயற்கைக்கோள் தொலைபேசி அழைப்போ, ஒரு சிறு மின்னனுத் தகவலோ கூட சிக்கவில்லை. நூற்றுக்கணக்கான அல்காய்தாவின் உறுப்பினர்களை எட்டாண்டுகளிள் பிடித்திருப்பதாகச் சொன்னாலும் அல்காய்தாவின் உள்வட்டத்திற்குள் சி.ஐ.ஏ நுழைய முடியவில்லை. மிக நவின எதிரியை, பின்லேடன் மிகப் பழைமையான முறையில் வெற்றி கொண்டார்.
Tuesday, April 8, 2008
அமெரிக்காவும் பின்லேடனுன் ...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment