இஸ்லாத்தின் பார்வயில் விதி ~ திராவிட முஸ்லிம்

Friday, April 11, 2008

இஸ்லாத்தின் பார்வயில் விதி

நம் வாழ்க்கையின் சம்பவங்களான உணவு, செயல்பாடுகள், வெற்றி தோல்விகள், மரணம் எல்லாம் ஆதியிலேயே விதிக்கப்பட்டுவிட்டது என்றால் மனிதன் செய்யும் முயற்சியின் அவசியம்தான் என்ன ?
ஒரு விபத்தில் அகப்பட்ட மனிதன் மரணத்திலிருந்து காப்பாற்ற டாக்டரிடம் எடுத்துச் செல்வது எதற்கு ? ஒருவனுக்கு விதிக்கப்பட்டதை அவன் அடைந்து கொள்வான் என்றால் எதற்காக முயற்சிக்க வேண்டும் ? ஆனால் இஸ்லாத்தில் விதி என்பது உண்டு. அதை நம்ப வேண்டும் இன்னும் விதி நம்பிக்கைக்கு ஒரு முற்றுப்புள்ளியும் வைத்து விடுகிறது.
மனித வாழ்க்கையயைப் பற்றி எடுத்துக்கொண்டால் அந்த மனிதன் வாழ்க்கையின் பிறப்பு முதல் இறப்பு வரை அவனுடைய வாழ்க்கையின் எல்லா அம்சமும் அல்லாஹ்வின் விதித்தப்படியே நடக்கிறது.
இன்னும் அல்லாஹ் கூறுகிறான் " ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீர வேண்டும்" (3:185)
மரணம் என்பது இறைவனின் விதியாகும்.ஜனனம் உண்டென்றால் மரணம் நிச்சயமாக உண்டென்பது திட்டவட்டமாகும்.
இந்த உலகம் ஒரு சோதனைக்களம் இங்கு வேதனைகளும், சோதனைகளும், நஷ்டங்களும், கஷ்டங்களும் கொடுக்கப்படுவதற்கு காரணம் அவர்களில் சிறந்தவர்கள் யார் என்பதை பிரித்தறிவிப்பதற்காகவேயாகும் எனினும் எந்த ஆத்மாவும் அதன் சக்திக்கு மிஞ்சி நிர்பந்திக்கப்படுவதில்லை என்றேம் இறைவன் கூறுகிறான்.
ஆறறிவுடைய மனிதனின் செயல்பாடுகளுக்கும், ஐந்தறிவுடைய மிருகங்களின் செயல்பாடுகளுக்கும் பெருத்த வேறுபாடு உண்டு. மிருகங்கள் தன் சொந்த இனத்துடனே உறவுவைத்துக் கொள்ளும், தனக்கு ஏற்புடைய உணவுகளையே உட்கொள்ளும். இந்த விதியிலிருந்து அவைகள் மீறுவதில்லை.எதைச் செய்ய வேண்டும் எதை உண்ண வேண்டும் என்பது அவைகளின் ஜின்களில் பதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இதர உயிரினங்களின் செயல்பாடுகள் அனைத்தும் பரிபுரணமாக இறைவனின் விதிப்படியே நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
மனிதர்களும், மற்ற உயிரினங்களுக்கும் இடையேயுள்ள முக்கிய வேறுபாடுகளின் ஒன்று இச்சாசக்தி(மனோ இச்சை) எனும் சுதந்திர உணர்வு ஆகும்.
கைகள் கொண்டு எதைச் செய்யவுன் மனிதனால் முடியும். ஆனால் கைகளுக்குரிய சுதந்திரம் மனோ இச்சையோடு தொடர்புபடுத்தி வைக்கப்பட்டுள்ளது. பேனா கொண்டு எழுத முடியும் அது இறைவனின் விதிப்படியாகும். அந்த பேனா கொண்டு என்ன எழுத வேண்டும் என்பதை தீர்மானிப்பது அவனது மனோ இச்சையானது குறிப்பிட்ட ரீதியில் சுதந்திரமானதாகும். இந்த சுதந்திரத்தை உபயோகப்படுத்துவதில் தான் மனிதன் நல்லவனாகவும், தீயவனாகவும் ஆகின்றான்.
எந்த ஒரு விஷயத்திலும் நன்மை தீமை, நீதி அனீதி, தர்மம் அதர்மம், நேர்வழி வழிகேடு என இரு பாதகளை காண முடியும். அவ்விரு பாதைகளையும் இறைவன் சுட்டிக் காட்டி அதில் ஒன்றை தேர்ந்தெடுத்து கொள்ளும் உரிமையை மனிதனின் சுதந்திரத்தில் விட்டு விடுகிறான்.
"நிச்சயமாக நாம் அவனுக்கு நேர்வழியைக் காண்பித்தோம்; (அதைப் பின்பற்றி) நன்றி உள்ளவனாக இருக்கின்றான்; (அதைப் புறக்கணித்து) நன்றியற்றவனாக இருக்கின்றான்" (76:3)
"அன்றியும் (நன்மை, தீமையாகிய) இரு பாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம்" (90:10) என்று இறைவன் கூறுகிறான்.
மேலும் அல்லாஹ் நாடியிருந்தால் மனிதர்கள் எல்லோரையும் விசுவாசிகளாகப் படைத்திருக்கலாம்.
"உங்கள் இறைவன் நாடியிருந்தால் பூமியிலுள்ள அனைவரையும் விசுவாசியாக்கியிருப்பான்" (4:168)
ஆனால் அவன் நன்மை தீமையை கேட்டறிந்து விளங்கிக் கொள்ளும் ஆற்றல் உடையவனாக மனிதன் படைக்கப்பட்டிருப்பதனாலேயே அவனை இயற்கையாகவே விசுவாசிகளாகப் படைக்காமல் சுத்ந்திர ஜிவியாகப் படைத்தான்.
மனிதனை சுத்ந்திர ஜிவியாகப் படைத்திருப்பதே அவனை சோதிப்பதற்காகவே ஆகும். இத்தகைய சோதனைக்கு உட்படுத்தப்படக் கூடிய ஜிவியாக மனிதன் இருப்பதனாலேயே அவன் மிகச் சிறந்த படைப்பிற்குரிய தகுதியைப் பெற்றவனாகிறான்.

No comments: