வேலூரில் 200ஆண்டுகளுக்கு முன்பு நவாப்பு காலத்தில் கட்டப்பட்ட சிறப்புமிக்க பள்ளிவாசல் உள்ளது. இங்கு தொழுகை நடத்த அனுமதி கேட்டு மத்திய தொல்பொருள் பாதுகாப்பு துறைக்கு பல ஆண்டுகளாக முஸ்லிம்கள் கோரிக்கை மனுக்கள் அனுப்பியும் அனுமதி கிடைக்கவில்லை.
இந்த நிலையில், தமுமுக சார்பில் கோட்டையில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை(09.05.2008) ஜும்மா தொழுகை நடத்தப்போவதாக அறிவித்திருந்தது. இதற்கு காவல்துறை தடை விதித்திருந்தது. தடையை மீறி யாராவது உள்ளே நுழைய முயன்றால் கைது செய்யப்படுவார்கள் எனவும் எச்சரித்திருந்தது. கோட்டை வளாகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுயிருந்தனர் .
கோட்டைக்குச் செல்லும் வழிகளான மக்கான் சந்திப்பு, பெங்களூர் சாலை, பைபாஸ் ரோடு, கோட்டை சுற்றுச்சுவர், ஆபிஸர்ஸ் லைன் ஆகிய முக்கிய இடங்களில் காலை 6 மணி முதலே சாலைகளில் தடைகளை ஏற்படுத்தி போக்குவரத்து நிறுத்தப் பட்டது. அந்த வழியாக செல்ல யாரும் அனுமதிக்கப்படவில்லை.
கோட்டை சுவர் மீது துப்பாக்கியுடன் போலீசார் நிறுத்தப்பட்டனர். கோட்டை வாசல் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கூட்டத்தைக் கலைக்க பயன்படும் "வஜ்ரா' கனங்கள், "வருணா' வாகனங்கள், தீயணைப்பு வண்டிகள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டன.
வடக்கு மண்டல போலீஸ் ஐஜி ராதாகிருஷ்ணன், வேலூர் சரக டிஐஜி சுந்தரமூர்த்தி ஆகியோர் தலைமையில் வேலூர் சூப்பிரண்டு அறிவுச் செல்வன், காஞ்சிபுரம் சூப்பிரண்டு பெரியய்யா, திருவண்ணாமலை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், வேலூர் கூடுதல் சூப்பிரண்டு ராமதாஸ் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னின்று கவனித்தனர்.
இந்த நிலையில் காலை 12 மணி அளவில் டோல்கேட் பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் குவிந்தனர். தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டனர்.
பைபாஸ் சாலை வந்ததும் அவர்கள் அனைவரும் கோட்டையை நோக்கி நடக்க முற்பட்டனர். ஆனால், கோட்டையை நெருங்க முடியாதபடி தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. போலீசாரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் காணப்பட்டது. கோட்டைக்குள் செல்ல முடியாமல் போனதால் ஆபிஸர்ஸ் லைன் பகுதியில் முஸ்லீம்கள் அனைவரும் சாலையில் பாய் விரித்து பகல் 12.30 மணி க்கு தொழுகை நடத்தினர்.
போராட்டம் முடிந்த பிறகு தலைவர் ஜவாஹிருல்லா பேசுகையில் ' இந்த போரட்டம் ஒத்திகைதான். இப்பிரச்சனை குறித்து முதலமைச்சர் தலையிட்டு மத்திய அரசிடம் தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி வேலூர் கோட்டையில் உள்ள பள்ளிவாசலை தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும். பள்ளியை திறக்க மறுக்கும் தொல்பொருள் பாதுகாப்பு துறை கூறும் காரணம் சரியான காரணம் அல்ல. இன்னும் சிறிது காலம் பொறுமை காப்போம். இல்லாவிட்டால் தொடர் போரட்டங்கள் நடத்தி பள்ளியை மீட்போம்' என கூறினார்.
Saturday, May 10, 2008
இறைபள்ளிக்காக சங்கமித்த இளைஞர் பட்டாளம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment