பிரபல தலித் சிந்தனைவாதியும் "தலித் வாய்ஸ்" பத்திரிக்கையின் ஆசிரியருமான V.T. இராஜசேகர் அவர்கள், "நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் வெடிகுண்டு சம்பவங்களுக்குப் பின்னால் முஸ்லிம்களை மோசமானவர்களாகவும் தேச விரோதிகளாகவும் சித்தரிக்க ஹிந்துத்துவ இயக்கங்கள் நடத்தும் சதிகளே" என கூறினார். கேரளத்திலிருந்து வெளியாகும் "தேஜஸ்" என்ற தினசரிக்கு அவர் அளித்தப் பேட்டியின் பொழுது இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் நடைபெறும் குண்டு வெடிப்புகளைச் சாக்காகக் கொண்டு எண்ணற்ற முஸ்லிம் இளைஞர்கள் எவ்வித ஆதாரங்களும் இன்றி சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்படுகின்றனர். ஆனால் அவர்கள் கைது செய்யப்பட்டபின், வழக்குகள் தொடர்பாக அவர்கள் மீது எவ்வித மேல் விசாரணைகளும் நடைபெறுவது கிடையாது. இதற்குக் காரணம், சம்பந்தப்பட்ட வழக்கு தொடர்பாக அவர்களின் விசாரணை நடத்த எவ்வித ஆதாரங்களும் இன்மையே காரணமாகும்.
இந்தியாவை உலுக்கிய பல்வேறு தீவிரவாதத் தாக்குதல் படுகொலை சம்பவங்ககளுக்குப் பின்னணியில் RSS நியமித்த காவல்துறையினரே செயல்பட்டுள்ளனர். ஆனால் ஒரு நாடகம் போன்று பின்னர் அவை அனைத்தும் முஸ்லிம்களின் மீதே சுமத்தப்பட்டன. பாராளுமன்றத் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் செயல்பட்டது RSS-ஐத் தலைமையாகக் கொண்ட ஹிந்துத்துவவாதிகளின் சதியாலோசனை தான் என்பது தெளிவானதாகும். நாட்டில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஒவ்வொரு தீவிரவாதத் தாக்குதல்களின் பின்னணியில் மேல் சாதியினர் என்று சொல்லிக் கொள்வோரின் விருப்பங்களையும் அவர்களுக்கு விளையும் நன்மைகளையும் கண்டுகொள்ள முடியும்.
நாட்டில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் பல வருடங்களாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். கைதுக்குப் பின்னால் தீவிரவாதி என முத்திரைக் குத்துதல் மிகவும் சாதாரணமாக நடைபெறும் விஷயமாகும். ஆனால் அக்கைதுகளுக்குப் பிறகு அவர்கள் தீவிரவாதிகள் என்பதற்கு ஆதாரமான ஆவணங்கள் எதுவும் நீதிமன்றங்களில் அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்படுவது கிடையாது. மேல் விசாரணைகளோ ஜாமீனோ இவர்களுக்குக் கிடைப்பதில்லை. நீதிமன்றம் என்பது என்ன என்பதைக் கூட இவர்களில் பலர் இன்று மறந்து போய் விட்டனர். இளைஞர்களை மட்டுமே குறிவைத்து ஆயிரகணக்கானவர்களைச் சிறையிலடைத்தது மூலம், அரசு தெளிவான முஸ்லிம் இன அழிப்பில் ஈடுபடுகின்றது.
அப்துல் நாசர் மஹ்தனி குற்றம் சுமத்தப்பட்டு ஒன்பதரை வருடங்கள் கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்குத் தேவையான மருத்துவ உதவி செய்யக்கூட அரசு இயந்திரங்கள் தயாராகவில்லை. ஆனால், இறுதியில் அவர் மீது சுமத்தப்பட்ட அத்தகையக் கடுமையான குற்றங்களுக்கு ஒரு சிறு ஆதாரம் கூட சமர்ப்பிக்க இயலாமல் போனதால் அவர் விடுதலை செய்யப்பட்டார். ஒவ்வொரு குண்டுவெடிப்புகளின் பின்னணியில் இவரைப் போன்று ஆயிரக்கணக்கான மஹ்தனிகள் பலிகடாக்களாக ஆக்கப்படுகின்றனர்.
சாதி அமைப்பினை அடிப்படையாகக் கொண்டு மனித நேயத்திற்கெதிரான பல்வேறு கொடுமைகளை அரங்கேற்றிவரும் சனாதனமும் அதற்கு எதிராக இஸ்லாமும் எதிரிகளாக இன்று நிற்கின்றன. சனாதனம் சாதாரண மக்களை அநியாயமாக உறிஞ்சக்கூடியதாகும். ஆனால் அதே சமயம், இஸ்லாம் மனித முன்னேற்றத்திற்குத் தேவையான கொள்கைகளை முன் வைக்கக் கூடியதாகும்.
இன்றைய நாள்வரை இஸ்லாத்தை இல்லாமல் அழித்தொழிப்பதற்குப் மேல்சாதியினர் என்போர் தாழ்த்தப்பட்ட மக்களைத் தான் பயன்படுத்துகின்றனர். இருப்பினும் கால ஓட்டத்தில் ஒருநாள் இந்த மேல்சாதி சமூகத்தின் தந்திரங்களைத் தலித்களும் ஆதிவாசிகளும் நிச்சயமாகப் புரிந்துக் கொள்ளவே செய்வர்.
தலித்களையும் மத சிறுபான்மையினரையும் தங்களுக்குள் அடித்துக் கொள்ள வைக்க சனாதனம் அனைத்து வகைகளிலும் முயன்றாலும் இவைகளுக்கிடையிலான ஒற்றுமையில் யாதொரு குறைவும் ஏற்படவில்லை. இவர்கள் ஒற்றுமையுடன் வேலை செய்கின்றனர்; ஒற்றுமையுடனே வாழ்கின்றனர். பரஸ்பரம் அவநம்பிக்கையோ அல்லது தொட்டுப்பழகுவதிலோ எவ்விதப் பிரச்சனையும் இல்லை. கொல்கத்தாவில் மிக அதிகமாக முஸ்லிம்களே வாழ்கின்றனர். எனினும் அங்கு பல்வேறு ஜாதி மக்களுடன் முஸ்லிம்களுக்கு எவ்விதத் தீட்டுப் பிரச்சனையும் இல்லை.
இந்தியாவிற்கு வந்த முஹம்மத் கஜ்னவி, சோமநாதர் ஆலயத்தில் விஸ்வரூபம் எடுத்து நின்ற சமூகப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவரவே அதனை அவர் தகர்த்தார். அக்காலத்தில் சோமநாதர் ஆலயத்தில் ஆயிரக்கணக்கான அபலைகள் 'தேவதாசிகள்' என்ற பெயரில் இருந்தனர். இதே போன்று ஆலயங்கள் என்ற பெயரில் மூடநம்பிக்கைகள் மற்றும் அநாச்சாரங்களுக்காக நிர்மாணிக்கப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருந்த அநேக ஆயிரம் விபச்சாரக் கூடங்களை அவர் தகர்த்திருந்தால் அது அவருக்கு மிகப்பெரிய வெற்றியாகவே அமைந்திருக்கும்.
வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு ஆட்சி அதிகாரம் கிடைக்கப்போவதில்லை. எந்த ஒரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவும் செய்யாது. மாநிலம், சாதி அடைப்படையிலான அமைப்புகளுக்கு அதிகாரம் உடைய புதிய அரசியல் கூட்டணிக்கே கேரளம் உட்பட இனி வரும்காலங்களில் முன்னேற்றம் இருக்கும். சமயச்சார்பற்ற கட்சிகள் நிர்ணயிக்கக் கூடிய அரசியல் இனி இந்தியாவில் உருவாகும்.
பாஜக, முஸ்லிம்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வெளிப்படையாகத் தெரியும் எதிரி எனில், காங்கிரஸும் CPM-மும் மறைவான எதிரிகளாகும். மறைவான எதிரிகளே மோசமான எதிரிகளாவர். கேரளத்திலுள்ள பிரபலமான சிறுபான்மையினரான ஈழவ சமூகத்தை மார்க்ஸியமும் பிராமணீயம் என்ற சனாதனமும் ஹைஜாக் செய்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment