கர்நாடகாவில்"ராமசேனா"வின் அட்டகாசம் ~ திராவிட முஸ்லிம்

Tuesday, February 10, 2009

கர்நாடகாவில்"ராமசேனா"வின் அட்டகாசம்


இந்துக் கலாச்சாரம், பாரதீயப் பண்பாடு என்னும் போர்வையில் இந்துமத வெறியாட்டம் கருநாடகாவில் பச்சையாகவே நடத்தப்பட்டு வருகிறது. அரசோ, காவல்துறையோ இதனைக் கண்டு கொள்வதேயில்லை. அப்படியே வழக்கைப் பதிவு செய்தாலும் சில நாள்களில் முடித்து விடுகிறார்கள்.

இந்நிலையில், கேரள மாநில மார்க்சிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் குன்ஹாம்பு என்பவரின் மகள் சுருதி எனும் 12ஆம் வகுப்பு மாணவி காசர்கோடில் உள்ள தன் பெற்றோரைப் பார்த்துவிட்டு மங்களூர் திரும்பி வந்து கொண்டிருந்தார். காசர்கோடைச் சேர்ந்த ஷாபிப் எனும் இசுலாமிய மாணவரும் அதே பேருந்தில் பயணித்தார்.

அவர்கள் இருவரையும் ராமசேனா குண்டர்கள் வலுக்கட்டாயமாகப் பேருந்தில் இருந்து இறக்கி ஆட்டோ ரிக்ஷா ஒன்றில் ஏற்றி ஓரிடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். முசுலிம் பையனுடன் பேசியது குற்றம் எனக் கூறிக் குண்டர்களின் காலில் விழுந்து கும்பிடச் செய்து பின்னர் விடுவித்துள்ளனர். இந்தக் குற்றத்தை மீண்டும் செய்யமாட்டேன் -அதாவது முசுலிம் மாணவனுடன் இனிப் பேசமாட்டேன் என்று உறுதி கூறிய பின் விடுவிக்கப்பட்டார்.

இந்தச் செயலின் பின்னணியில் பஜ்ரங் தள ஆள்கள்தான் இருக்கிறார்கள் என்று காவல்துறை கூறுகிறது. ஆனால் அதன் தலைவர் ஷரன்பம்ப்வெல் அதனை மறுத்துப் பேசியுள்ளார். முசுலிம் இளைஞனைக் கடுமையாக அடித்துத் தாக்கிப் பின்னர்தான் விடுவித்துள்ளனர்.

சட்டமன்ற உறுப்பினரின் மகளுக்கே இந்த நிலை என்றால் - சாதாரணமானவர்களுக்கு என்னதான் ஏற்படாது என்று சட்டமன்ற உறுப்பினர் கேட்கிறார்.

மக்களும் கேட்கிறார்கள் - பதில் கூறவேண்டிய பாஜக அரசு மவுனம் சாதிக்கிறது.
-விடுதலை

No comments: