அறிந்துக்கொள்வோம் வாருங்கள் ... ~ திராவிட முஸ்லிம்

Saturday, April 18, 2009

அறிந்துக்கொள்வோம் வாருங்கள் ...

உலக முஸ்லிகளின் தலைவராக போற்றப்படக்கூடிய நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தன் மரணத்தின் போது அரபு தீபகற்பத்தில் சுமார் 23 லட்சம் சதுர மையில்களை ஆண்ட மாமன்னராக இருந்த போதும் தன் எளிமையான வாழ்க்கையின் மூலம் , எதிரிகள் தொரோகிகள் கூட அவர்மேல் களங்கம் கற்பிக்க முடியாதவாறு தூய வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் 25ஆம் வயது வரை வணிகராகவும், நாற்பதாம் வயது வரை ஊரிலேயே பெரிய செல்வந்தராகவும் இருந்தார்கள்.அவருக்கு படிக்கவும் தெரியாது, எழுதவும் தெரியாது. தன் 40 ஆம் வயதில், தமக்கு இறைவனிடமிருந்து செய்தி வருவதாக வாதிட்டார்.

ஆம். அவர் முலமாக அருளப்பெற்ற அத்திருக்குர்ஆனை ஆராய்ந்தால் அரபு மொழியில் மிக உயர்ந்த தரத்துடனும், இசை நயத்துடனும், காலத்தால் முரண்படாமலும், அக்காலத்து மக்களால் கற்பனை செய்து பார்கக முடியா பல அறிவியல் தகவல்களை கொண்டதாக அல்குர்ஆன் விலங்குகிறது .

இதன்மூலம் பல மக்கள் இஸ்லாத்தை ஆராய்ந்தார்கள். ஏற்றும் கொண்டார்கள். இதன்காரமாக செல்வத்தை பெருக்கிக் கொள்வதும் நோக்கமாக இருந்ததா என்றால் இல்லவேயில்லை.
ஏனெனில் மார்க்கத்தை எடுத்துரைத்ததால் அவர்கள் சொந்த ஊரை விட்டும், தமது சொத்துக்கள் இழக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

ஆனாலும் அனைத்தையும் துறந்து விட்டு வெறுங்கையுடன் ஊரை விட்டு வெளியேறினார்கள்.
பல்லாண்டுகள் பாடுபட்டு திரட்டிய செல்வங்கள் அனைத்தையும் தமது கொள்கைக்காக இழக்கத் துணிந்தவருக்கு பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்வது நோக்கமாக இல்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.

ஊரை விட்டு விரட்டப்பட்டு மதீனா நகரில் தஞ்சம் புகுந்து, இஸ்லாமிய பணி செய்து ஓரு இஸ்லாமிய ஆட்சியையும் நிறுவி மாமன்னராக ஆனபோதும்

தமக்காக செல்வம் திரட்டவில்லை.

அரண்மனையில் வசிக்கவில்லை.

அபிசீனியா மன்னருக்கு கடிதம் எழுதுவது முதல் ஆடுகளில் பால் கரப்பது வரை தன் வேலையை தானே செய்துக்கொண்டார்.

கடைசி வரை குடிசையிலேயே வாழ்ந்து குடிசையிலேயே மரணித்தார்கள்.

அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் ஒரு நாளில் தொடர்ச்சியாக மூன்று வேளை உணவு உண்டதில்லை.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இரண்டு சிறிய போர்வைகளையே மேலாடையாகவும், கீழாடையாகவும் அணிந்தனர். விஷேச நாட்களில் அணிந்து கொள்வற்காக தைக்கப்பட்ட ஆடைகள் ஒன்றிரண்டு மட்டுமே அவர்களிடம் இருந்தன.

வாழ்நாள் முழுவதும் அவர்கள் வீட்டில் விளக்கு இருந்ததே இல்லை. இருட்டிலே தான் அவர்கள் இரவுப் பொழுதைக் கழித்திருக்கிறார்கள்.

தமது கவச ஆடையை அடைமானம் வைத்து மீட்காமலே மரணித்தார்கள்.

ஒரு நிலப்பரப்பு, குதிரை, சில ஆடுகள் ஆகியவை தாம் அவர்கள் விட்டுச் சென்றவை. அதுவும் தமது மரணத்திற்குப் பின் அரசுக்குச் சேர வேண்டும்: தமது குடும்பத்தினர் வாரிசாகக் கூடாது என்று பிரகடனம் செய்தார்கள்.

நபிகள் நாயகத்தின் இந்தத் தூய வரலாற்றை அறிகின்ற எவரும் பொருள் திரட்டுவற்காக இறைவன் பெயரால் நபிகள் நாயகம் கற்பனை செய்தார்கள் என்று நினைக்க மாட்டார்.
மக்களிடம் புகழ், மரியாதை அடைவற்காக இப்படிக் கடவுள் பெயரைப் பயன்படுத்தியிருப்பார்களோ என்று நினைத்தால் அதுவும் கிடையாது.

தம் காலில் யாரும் விழக்கூடாது என்றும் தான் ஒரு சபைக்கு வரும்போது தனக்காக யாரும் எழுந்து நிற்க்ககூடாது என்றும் கண்டித்துள்ளார்கள். ஆதலாலே தன் உருவத்தை சித்திரமாக கூட வரயக்கூடாது ஏனனில் இதன்மூலம் வரும் சந்ததியினர் தன்னை கடவுளாக மாற்றிடுவார்களோ என்ற அச்சவுணர்வின் காரணமாக அதையும் தடுத்தவர் தான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.

No comments: